#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முடிவுக்கு வருமா ஸ்ரீரெட்டி விவகாரம்? ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தருவதாக பிரபல தயாரிப்பாளர் அறிவிப்பு!
நடிக்க வாய்ப்புத்தருவதாக கூறி இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை என்றும் கூறி அரை நிர்வாண போராட்டம் நடத்தினர் நடிகை ஸ்ரீரெட்டி.
இவர் நடத்திய இந்த போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு
சென்னை வந்த இவர் பிரபல தமிழ் இயக்குநர் முருகதாஸ், சுந்தர் சி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா பிரபலங்கள் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வந்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளரான குட்டி பத்மினி, சீரியல் மற்றும் வெப் சீரியல்களில் நடிக்க, ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பளிப்பதாக கூறியுள்ளார்.மேலும் ஸ்ரீரெட்டியின் நிலைமையை கண்டு தான் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் குட்டி பத்மினி.