"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
நடிகை சாய்பல்லவிக்கு இப்படி ஒரு நிலைமையா? வருத்தத்தில் ரசிகர்கள்!
மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி ஒரே படத்தில் தென்னிந்தியா முழுக்க ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. மேக்கப் இல்லாத அவரது முகம், அசத்தலான நடனம், அருமையான நடிப்பு என ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார் நடிகை சாய்பல்லவி.
ப்ரேமம் படத்தை அடுத்து ஒருசில மலையாள படங்கள், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி. சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 , மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக NGK படத்தில் நடித்திருந்தார். ஆனால் 2 படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதனால் அடுத்து தான் நடிக்கும் படங்களின் கதையை கவனமாக தேர்வு செய்துவருகிறார் சாய் பல்லவி.
ஆனால், அதுவே அவரது சினிமா வாழ்க்கைக்கு தற்போது கேள்விக்குறியாக உள்ளது. அதாவது, இயக்குனர்களிடம் புது படத்திற்கு கதை கேட்பது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை என்று நடிக்க மறுப்பது இப்படி தொடர்ச்சியாக செய்துவருகிறாராம் சாய்பல்லவி.
இதனால் கடுப்பான பல தயாரிப்பாளர்கள் சாய்பல்லவி பெயரை சொன்னாலே வேண்டாம் என்கிறார்களாம். இப்படியே சென்றால் இனி யாரும் அவரை தேடி சென்று கதை சொல்ல மாட்டார்கள், பட வாய்ப்புகள் வருவதும் கடினம்தான் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.