கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பெண்கள் கழிவறைக்குள் ரகசிய கேமிரா; சலூன் கடை உரிமையாளர் கைது.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டையில், 20 கட்டிடங்கள் கொண்ட பிரம்மாண்ட வளாகத்தில் பல கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த 20 கட்டிடங்களுக்கும் ஒரே இடத்தில் ஆண்கள், பெண்கள் கழிவறை தனித்தனியே இருக்கிறது.
இங்கு சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் மிதுன். இவர் ஆண்கள் கழிவறை சுத்தமாக இல்லை என்று கூறி, பெண்கள் கழிவறையை அவ்வப்போது உபயோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு ரகசிய கேமிரா வைத்தும் கண்காணித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டையால் விரக்தி; இரயில் முன் பாய்ந்து இளைஞர் மரணம்?.. சடலமாக மீட்கப்பட்ட உடல்.!
ரகசிய கேமிரா உறுதி
சமீபத்தில் ரகசிய கேமிரா சிக்கிக்கொண்ட நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது, அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் மிதுனிடம் விசாரிக்க, அவர் தான் கேமிரா பொருத்தினேன் என உறுதி செய்துள்ளார்.
இதனால் சலூன் கடை உரிமையாளர் மிதுனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இதுபோன்ற சல்லாப ஆசாமிகளுக்கு அதிகாரிகள் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்பச் சுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.. கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி.!