பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. சூப்பரு! மீண்டும் குக் வித் கோமாளி 3ல் களமிறங்குகிறாரா இந்த கோமாளி! தீயாய் பரவும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் ஏராளம். இந்நிலையில் கடந்த வாரம் முதல் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கப்பட்டுள்ளது.
இதில் 10 பிரபலங்கள் போட்டியாளர்களாகவும், 10 கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் ரீச்சானவர் புகழ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புகழுக்கு ஏராளமான படவாய்ப்புகளும் வரத் துவங்கியது. புகழ் ஹெச் வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள வலிமை படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி 3ல் புகழ் கலந்து கொள்ளவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது குக் வித் கோமாளி3ல் புகழ் கலந்து கொள்ள உள்ளதாகவும், அவர் படப்பிடிப்பில் உள்ள புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் மீண்டும் கோமாளியாக களமிறங்குகிறாரா? அல்லது கெஸ்ட்டாக வருகை தர உள்ளாரா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.