பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
#CinemaBreaking: தமிழ் ல தான் பேசுவான் - அல்லு அர்ஜுன்..! ரசிகர்கள் சத்தத்தில் குலுங்கிய அரங்கம்.!!
கடந்த டிச. 17 ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் - நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை இயக்குனர் தேவி ஸ்ரீ பிரசாத் இயக்கி இருக்கிறார். இப்பபடத்தின் என் சாமி பாடல், ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
படம் 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன், வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. செய்தியாளர்களிடையே பேசிய அல்லு அர்ஜுன், "உங்களின் வரவேற்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. நான் தமிழில் அடுத்து படம் நடிக்கவுள்ளேன்.
சிறுவயதில் நான் சென்னையில் தான் இருந்தேன். இங்கிருந்து தான் ஆந்திராவுக்கு சென்றேன். தமிழில் பேசும் திடீரென வார்த்தை தவறுதலாக வந்தாலும், நான் தமிழில் தான் பேசுவேன். சமந்தா நமது ஊர் பெண். அவர்களுக்கு மிக்க நன்றி. தமிழ் மக்களுக்கு மிகுந்த நன்றி. தமிழ் ரசிகர்களை நினைத்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பேசினார்.
பிண்ணனியில் இருந்த தமிழ் ரசிகர்கள் அல்லு அர்ஜுனின் ஒவ்வொரு பேச்சுக்கும் தங்களின் ஆரவாரத்தை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தனர்.
Watch Video : Click Here https://fb.watch/a3UMGV8EVW/