பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
2வது திருமணத்திற்கு தயாரான தேவயானி! மாடர்ன் உடையில் அழகு தேவதையா ஜொலிக்கிறாரே!! வைரலாகும் வீடியோ!!
தமிழில் நடிகர் அஜித்துடன் காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தேவயானி. அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் தேவயானி விஜய், அஜித், விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
அவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். தேவயானி சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார். அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த தொடரில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தேவயானிக்கு தற்போது இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் அவர் போட்டோ ஷூட்டிற்காக மாடர்ன் உடையில் வயது குறைந்து அழகு தேவதையாக மாறியுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.