#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நவம்பர் 03ம் தேதி வெளியாகிறது ராரா சரசுக்கு ராரா திரைப்படம்; அடல்ட் காமெடியில் அள்ளும் டிரைலர்.!
கேஷவ் தேபூர் இயக்கத்தில், ஸ்கை வாண்டர்ஸ் தயாரிப்பில், ஜிகேவி இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ரா ரா சரசுக்கு ரா ரா.
ஆக்சன், திரில்லர், அடல்ட் காமெடி கொண்ட திரைப்படமாக தயாராகியுள்ள இப்படத்தில், கல்லூரி வினோத், அபிஷேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கல்லூரி வினோத், அபிஷேக், கார்த்திக், விஜய் பிரசாத், காயத்ரி படேல், சாரா, தீபிகா, சிம்ரன், காயத்ரி ரோமா, அக்ஷிதா ராதா கிருஷ்ணன், நிகிதா, ஜெயவனி, ராஜன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் நவம்பர் மாதம் 03ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் ட்ரைலர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
சமீபகாலமாகவே திரிஷா இல்லனா நயன்தாரா, 90 எம்எல், இருட்டு அறையில் முரட்டு குத்து, இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு ஆகிய அடல்ட் கண்டன்ட் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோல, ரா ரா சரசுக்கு ரா ரா திரைப்படமும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தின் டிரைலர் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.