#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டிவி சீரியலை விட்டு வெளியேறிய மாபெரும் நடிகை? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழகம் மட்டும் இல்லாது இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த வளர்ச்சிக்கு அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும், நிகழ்ச்சிகளும்தான் காரணம். குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பாகி வந்த சந்த்ரகுமாரி தொடரில் சமீபத்தில் அடுத்தடுத்த பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுவருகிறது. இரவு 9 . 30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த இந்த தொடர் சமீபத்தில் மாலை 6 . 30 மணிக்கு மாற்றப்பட்டது.
மேலும், சீரியலின் நேரம் மாற்றப்பட்டதில் இருந்து சந்தரகுமாரி சீரியலை தயாரித்து, நடித்துவரும் ராதிகா எந்த ஒரு காட்சியிலும் தோன்றவில்லை. இந்நிலையில் ராதிகா சந்த்ரகுமாரி சீரியலை விட்டு விளக்கியுள்ளதாகவும் அவரது இடத்திற்கு பிரபல நடிகை விஜி நடிக்கவுள்ளதாகவும் நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் நடைபெறும் இந்த அதிரடி மாற்றங்களால் குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.