பிரபல நடிகர், நடிகைகளை தாண்டி முதல் இடம் பிடித்த ராஜா ராணி செம்பா! எதில் தெரியுமா?



Raja rani semba has more followers in share chat

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஓன்று ராஜா ராணி. இதில் ஹீரோவாக குளிர் 100 டிகிரி பட நடிகர் சஞ்சீவ் கார்த்திக் என்ற வேடத்திலும், நாயகியாக ஆலியா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஏக பட்ட வரவேற்பு உண்டு.

ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம். அதற்கு முக்கிய காரணம், அடிக்கடி அவர் வெளியிட்டு வரும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான்.  இதுவரை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என புகைப்படங்கள், விடீயோக்களை பதிவிட்டுவந்த ஆலியா தற்போது ஷேர் சாட் பக்கமும் வந்துள்ளார்.

Aliya Manasa

அதுமட்டும் இல்லாமல், டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் ஆலியா தற்போது ஷேர் சாட்டில் அதிகம் பின்தொடர்பவர்கள் கொண்ட பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். இதை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல நடிகைகளான நிக்கி கல்ராணி, ராய் லட்சுமி, ஜனனி மேலும் பல்வேரு சீரியல் நடிகைகள், நடிகர் GV பிரகாஷ் இவர்களை தாண்டி அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார் ஆலியா.