#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. ராஜா ராணி 2 ஸ்ரிக்ட் மாமியாருக்கு இம்புட்டு அழகான மகளா! பேரழகில் சொக்கியிழுக்குறாரே!! வைரலாகும் கியூட் புகைப்படம்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரியமானவள் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பிரவீனா. இவர் மலையாளத்திலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் சன்டிவியில் மகராசி தொடரில் மாமியாராக நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய பிரவீனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசாவிற்கு ஸ்ரிக்ட் மாமியாராக நடித்து வருகிறார். மேலும் சினிமாவில் களமிறங்கிய அவர் நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமுடன் சாமி 2, ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை பிரவீனாவிற்கு கௌரி நாயர் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் வாவ் அப்படியே அம்மாவைப் போல இருக்கிறாரே என கமெண்டு செய்து வருகின்றனர்.