#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகையுடன் காதல்! திருமணம் எப்போ? ஓப்பனாக உண்மையை உடைத்த ராஜாராணி 2 ஹீரோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான தொடர் ராஜா ராணி. இதன் முதல் சீசன் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் நடித்து பிரபலமான சித்து நடித்து வருகிறார். மற்றும் ஹீரோயினாக ராஜா ராணி முதல் சீசனில் நாயகியாக, செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மானசா நடிக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் சித்துவிற்கு சிறந்த அறிமுக நாயகன் என்ற விருதும், ஆலியா மானசாவிற்கு சிறந்த மருமகளுக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் விருது விழா மேடையில் பேசிய இருவரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்பொழுது நடிகர் சித்துவிடம் அவரது திருமணம் குறித்து கேட்ட நிலையில், அவர் இப்போது காதலித்து வருகிறோம். இன்னும் கொஞ்சம் காதலித்து கொள்கிறோம். பிறகுதான் திருமணம் என்று வெட்கத்துடன் கூறியுள்ளார். சித்து திருமணம் தொடரில் ஹீரோயினாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து வருகிறார். மேலும் ஸ்ரேயா தற்போது விஜய் டிவியில் அன்புடன் குஷி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.