#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மறைந்த பிரபல நடிகர் ராஜசேகரின் மனைவிக்கு இப்படியொரு பரிதாப நிலையா? வேதனையுடன் காவல் நிலையத்தில் அதிரடி புகார்!
தமிழ் சினிமாவில் நிழல்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராஜசேகர். அதனை தொடர்ந்து அவர் பாலைவனச்சோலை, கல்யாணகாலம், தூரம் அதிகம் இல்லை, சின்ன பூவே மெல்ல பேசு போன்ற ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். மேலும் அதுமட்டுமின்றி அவர் சில படங்களையும் இயக்கியுள்ளார்.
மேலும் ராஜசேகர் சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, சத்யா போன்ற தொடர்களில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்த அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது.
நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா.அவருக்கு குழந்தைகள் யாரும் இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜசேகர் உடல்நலக் குறைவால் காலமானார். அதனை தொடர்ந்து தாரா தனது கணவர் மிகவும் ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் ராஜசேகரின் மனைவி தாரா வடபழனி காவல் நிலையத்தில் அக்கம்பக்கத்தினர் தொந்தரவு செய்வதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், வீடு வாங்க கடன் அளித்த வங்கியிலிருந்து தவணையை கட்ட சொல்லி அடிக்கடி நோட்டீஸ் வருகிறது. எவ்வித வருமானமும் இல்லாத நிலையில் நான் அதற்காக மிகவும் தவித்துவருகிறேன். இந்நிலையில் கணவர் வாங்கிய வீட்டில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அடிக்கடி தொந்தரவு செய்து தவறாக நடந்து கொள்கின்றனர். மேலும் வயது வித்தியாசமே இல்லாமல் அசோஷியேஷனில் பெரிய பொறுப்பில் இருக்கும் பெரிய பெரிய ஆட்களே அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயந்து நான் இரவில் எனது அக்கா வீட்டிற்கு சென்று விடுகிறேன் என கூறியுள்ளார்.