பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
Big Breaking: நடிகர் விஜயை உடனடியாக கைது செய்க - பிரபல அரசியல் கட்சி தலைவர் பரபரப்பு புகார்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் உட்பட பல நடிகர்கள் உழைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் நான் ரெடி பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், போதைப்பொருள் உபயோகத்தை தூண்டுவது போல அமைந்துளளதாக சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டை முன்வைத்து இருந்தனர்.
பாடல் வெளியான சமயத்திலேயே அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, லியோ பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அவரை விஜய் ரசிகர்கள் கடுமையாக வறுத்தெடுத்து வரும் நிலையில், பிரியாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உலாவவிட்டு வருகின்றனர்.
இதனால் பதறிப்போன ராஜேஸ்வரி பிரியா, டி.ஜி.பி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்து இருக்கிறார்.