#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரஜினியின் மதிப்பு குறைந்து விட்டதா.! விஜய்யின் சர்க்காரை நெருங்க முடியாத ரஜினியின் 2.0
2010-ம் வருடம் ரஜினி - சங்கர் கூட்டணியில் உருவாகிய எந்திரன் படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்று மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனை தொடர்ந்து இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் எந்திரன் 2.0. இந்த படம் எந்திரனின் 2 ம் பாகமாகவே கருதப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லன் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமாரும் நடித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பல ரசிகர்களின் மத்தியில் சத்யம் திரையரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது.
சரியாக மதியம் 12 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என சமூகவலைதளங்களில் ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் 12 மணிக்கெல்லாம் காத்திருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் தாமதமாகவே டிரைலர் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டது.
ரஜினி அரசியல் பற்றி ரஜினி அரசியலில் இறங்குவது உறுதி என்று அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் அவருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை அவரது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பலர் கணக்கிட துவங்கியுள்ளனர்.
அந்தவகையில் 2.0 ட்ரெய்லர் வெளியான 6 மணி நேரத்தில் 3.2 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் 2 லட்சத்து 86 ஆயிரம் பெயர் லைக்கும் செய்துள்ளனர். இதனை நடிகர் விஜய்யின் சர்க்கார் டீசர் உடன் ஒப்பிடும்போது 2.0 ட்ரெய்லர் மிகவும் குறைவான வரவேற்பையே பெற்றுள்ளது.
கடந்த மாதம் 19ம் தேதி வெளியான சர்க்கார் டீசர் வெளியான பத்தே நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியது. இந்த வேகம் இன்னும் அதிகமாகி, இருபது நிமிடத்தில் இரண்டு மில்லியன், முப்பத்தைந்து நிமிடத்தில் மூன்று மில்லியன் எனச் சென்று ஒன்றேகால் மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. சர்க்கார் டீசர் வெளியான 2 மணி நேரத்தில் எட்டு லட்சத்து அறுபத்து ஓராயிரம் லைக்குகளையும், ஐந்து மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்குகளையும் பெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், எமி ஜாக்சன், இயக்குனர் சங்கர் என மிகப்பெரிய கூட்டணியில் மூன்று மொழிகளில் உருவாகிய 2.0 ட்ரெய்லரால் விஜயின் சர்க்கார் டிரைலர் சாதனையை நெருங்க கூட முடியவில்லை.
இதிலிருந்து தமிழகத்தில் ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கை விட விஜய்க்கு தான் அதிகமாக இருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகின்றது.