#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எங்க குலசாமி., உன் காது கேட்கலையோ?" - ரஜினியை நேரில் பார்க்க வேண்டி கண்கலங்கி அபயக்குரலில் கலங்கிய ரசிகர்..!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் இன்று பல இடங்களில் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
இன்று காலை முதலாகவே ரஜினியின் ரசிகர்கள் சிலர் தனியாகவும், தங்களின் குடும்பத்தோடும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று ரஜினியை நேரில் சந்திக்க முற்பட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது வரை வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதற்கிடையில், அவரின் ரசிகர் ஒருவர், "தலைவா.. வெளியே வா., உன் காதுகளில் கேட்கலையோ.,. வா சாமி., எங்க குலசாமி, வா ராஜா, எங்களின் ராஜாதி ராஜா. மன்னாதி மன்னனே, வாயா உன் முகத்தை பார்த்துவிட்டு போக வேண்டும்" என கனத்த குரலில் கண்கலங்கியபடி பேசினார்.