ரஜினி சார்.. வாங்க சார்.. கைகூப்பி கதறி கதறி அழுத ரஜினி ரசிகை..



Rajinikanths girl fan crying to see him viral video

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் அவர் வீட்டின் முன் திரண்டநிலையில் பெண் ரசிகை ஒருவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

rajinikanth

இதனை முன்னிட்டு ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவிக்க ஏகப்பட்ட ரசிகர்கள் அவரின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன் குவிந்த வண்ணம் இருந்தனர். ரஜினிகாந்த் அவர்கள் வீட்டில் இல்லாததை அறியாத அவரது ரசிகர்கள் ரஜினிகாந்தை வீட்டை விட்டு வெளியே வரும்படியும், அவரை தாங்கள் பார்க்கவேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து கோஷம் எழுப்பினர்.

அதில் ரஜினிகாந்தின் பெண் ரசிகை ஒருவர், "சூப்பர் ஸ்டார்.. உங்கள் ரசிகர்கள் வந்திருக்கும்.. வாங்க சார்.. உங்கள பார்க்கணும் சார்.. பார்க்க விடமாற்றங்க சார் என அழுதபடி கைகூப்பி கோரிக்கை வைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.