பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தளபதி விஜய்யை சந்தித்த பிக்பாஸ் ராஜு! அவர் கூறிய வார்த்தையால் செம ஹேப்பி! சுவாரஸ்ய நிகழ்வு!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 5ல் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்று, 50 லட்சம் பரிசுத் தொகையை தட்டிச் சென்றார். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர்.
அதனைத் தொடர்ந்து அவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் நடித்து வருகிறார். தளபதி விஜய்யின் தீவிர வெறியரான ராஜு அவரை பீஸ்ட் படப்பிடிப்பில் சந்தித்தது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படப்பிடிப்பில் பார்த்தேன். என்னை கண்ட அவர் அழைத்து நீங்க செட்டிற்கு புதுசா? எனக் கேட்டார். நான் இயக்குனர் நெல்சனின் நண்பன். அவருடன் வேலை பார்த்துள்ளேன் என கூறினேன்.
பின்னர் கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் உங்களது கண்கள் செமையா இருக்கு என கூறினார். பின்னர் விஜய்க்காக நான் சிறு வயதிலிருந்தே சேர்த்து வைத்திருந்த அவரது புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை அவரிடம் காட்டினேன். அதனைப் பார்த்த அவர் அதில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.