பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
எல்லாம் மனைவிக்காக.. பிக்பாஸில் வென்ற பணத்தை வச்சு இதைதான் செய்ய போறேன்.! முதன்முதலாக போட்டுடைத்த வின்னர் ராஜு!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கடந்த வாரத்துடன் முடிவடைந்தது.
உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அவர்களில் பாவனி, நிரூப், அமீர், ராஜு, பிரியங்கா ஆகியோர் மட்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்று, 50 லட்சத்தை தட்டிச் சென்றார்.
டைட்டில் வென்ற ராஜுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த ராஜு, தற்போது தன்னை தேடி ஏராளமான வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார். மேலும் உங்களுக்கு கிடைத்த பரிசு தொகையை வைத்து மனைவிக்கு என்ன வாங்கி தருவீர்கள் என கேட்டதற்கு, மொத்த பணத்தையும் அவளுக்குதான் தருவேன். இதுவரை என்னிடம் எதுவுமே எதிர்பார்க்காத என் மனைவியை இனி வெற்றி பணத்தை வைத்து மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.