கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
செல்போன் வெடித்ததால் நடந்த சோகம்; டூ-வீலரில் சென்றவர் தலையில் படுகாயமடைந்து பலி.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, எம்.எஸ் அஹ்ரகாரம் பகுதியில் வசித்து வருபவர் ரஜினி (வயது 36). இவருக்கு தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை. அங்குள்ள தனியார் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று, ஞாயிற்றுக்கிழமை ரஜினி மற்றும் அவரின் நண்பரான ஆற்றுப்பாலம் பகுதியை சேர்ந்த பாண்டி (வயது 31) ஆகியோர் துணி எடுப்பதற்காக மதுரைக்கு சென்றுள்ளனர். இருவரும் கமுத்தகுடி பகுதிக்கு மாலை 5 மணியளவில் பயணித்துக்கொண்டு இருந்தனர்.
செல்போன் வெடித்து சோகம்
அச்சமயம் ரஜினியின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி விழுந்த ரஜினி, தலையில் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க பலியாகினார். அவரின் நண்பர் பாண்டி படுகாயமடைந்தார்.
இதையும் படிங்க: ஓட்டலில் வாங்கிய சிக்கன் கிரேவியை மறுநாள் சுடவைத்து சாப்பிட்ட இளைஞர் பலி.. மதுரையில் சோகம்.!
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பரமக்குடி காவல் துறையினர், ரஜினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பாண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: தாத்தா-பேரனின் உயிரை பறித்த மின்சாரம்; எமனாக மாறிய ஃபேன் சுவிட்ச்.! கரூரில் சோகம்.!!