பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ப்ளீஸ்.. விளையாட்டாக கூட அப்படி செய்யாதீங்க.! ரசிகர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்த நடிகை ரம்பா.! வைரல் வீடியோ..
தமிழ் சினிமாவில் உழவன் என்ற படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரம்பா. அதனை தொடர்ந்து அவர் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவர் 90ஸ் காலக்கட்டங்களில் ரஜினி, கார்த்திக், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் நடிகையாக, தொடையழகியாக வலம் வந்தார்.
அதனை தொடர்ந்து நடிகை ரம்பா கடந்த 2010ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பகிர்வார்.
இந்த நிலையில் தற்போது நடிகை ரம்பா தனது ட்விட்டர் பக்கத்தில், நெகட்டிவிட்டியை பரப்பாதீர்கள் என்ற கேப்ஷனுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், யாரும் நெகட்டிவாக பேசாதீர்கள். ஜோக்காக கூட இதை செய்ய வேண்டாம். உங்களுடைய உடல் இதற்கான வித்தியாசத்தை அறியாது. நாம் பேசும் வார்த்தைகளை பாசிட்டிவ்வாக மாற்றிக் கொண்டால் நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக மாறும் என கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Don't Spread Negativity 😊 pic.twitter.com/Ua3UeqVswi
— Rambha Indrakumar (@Rambha_indran) October 28, 2022