#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆபாச படத்தில் நடிக்கிறாரா நடிகை ரம்யா கிருஷ்ணன்? வெளியான அதிர்ச்சி தகவல்!
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் வெகுவான ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதன்பின்னர் வெளியான சீதக்காதி திரைப்படம் படும் தோல்வியை தழுவியது. தற்போது சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக கூறப்பட்டது. நடிப்பில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று அதில் சாதித்தும் காட்டியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் இன்றுவரை பிரபலமாக உள்ளது.
அதேபோல சமீபத்தில் வெளியான பாகுபலி பாகம் ஒன்னு, பாகுபலி பாகம் இரண்டிலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் அசத்தியிருந்தார். தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்து வருகிறாராம்.
ஏற்கெனவே இந்தக் கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது என்றும் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகி விட்டதால் ரம்யாகிருஷ்ணன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.