#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆபாச நடிகையாக மாறிய ராஜமாதா! இதுதான் காரணமா? அவரே கூறிய பதில்.!
தமிழ் சினிமாவில் படையப்பா படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் ரம்யாகிருஷ்ணன். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பல சாமி படங்களில் அம்மன்நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து திருமணமான நிலையில் படத்தில் நடிப்பதை குறைத்து கொண்ட அவர் ஒரு சில பாடல்களுக்கும், மற்றும் அவர் கௌரவ வேடங்களில் மட்டும் நடித்தார்.மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரம்யாகிருஷ்ணன் பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்தார்.அதன் மூலம் ரசிகர்களிடைய மாபெரும் வரவேற்பை பெற்று,உலக அளவில் பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் ஆபாச நடிகையாக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், பாகுபலி படத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். மேலும் நான் ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க வேண்டாம். புதிதாக கதாபாத்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் அதில் நடிக்கலாம் என நினைத்தேன்.
அந்த நேரத்தில் சூப்பர் டீலக்ஸ் வாய்ப்பு வந்தது.லீலா போன்ற கதாபாத்திரம் அடிக்கடி கிடைக்காது. அதனால் தான் தியாகராஜன் குமாரராஜா கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டேன். ட்ரெய்லரை வைத்து கதையை கண்டுபிடிக்க முடியாது என ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.