பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அப்படிபட்ட படமா இருந்தால்,10 கோடி கொடுத்தாலும் கண்டிப்பா நடிக்கமாட்டேன்! நடிகை ராஷி கண்ணா அதிரடி!
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து அடங்க மறு மற்றும் விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.
அப்பொழுது அவர் நான் என்றுமே பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். எனக்கு கதை பிடிக்கவில்லையென்றால் அந்த படத்துக்கு 10கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் நிச்சயம் நடிக்க மாட்டேன். ஆனால் கதை பிடித்தால் எவ்வளவு குறைவாக சம்பளம் தருவதாக சொன்னாலும் நடித்துவிடுவேன். எனக்கு ஆத்ம திருப்திதான் முக்கியம்.
ஆனால் அப்படி இருந்தும் சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாமல் இருக்கலாம். அதற்கு காரணம் சில படங்கள் கதையாக கேட்கும் போது மிகவும் நன்றாக இருக்கும். கண்டிப்பாக வெற்றி அடையும் என தோணும். ஆனால் அது திரையில் வரும்போது வேறு மாதிரியாகிவிடும் என கூறியுள்ளார்.