#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா காதலா? லைவ் வீடியோவில் வசமாக சிக்கிய ராஷ்மிகா!
தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் விஜய் தேவர்கொண்டா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார் முக்கியமாக அர்ஜீன் ரெட்டி படம் இவரை பிரபலமாக்கியது. இளம் பெண்கள் மத்தியில் இவருக்கு என்று தனி கிரேஸ் உண்டு. எதையும் வித்தியாசமாக முயற்சிக்கும் நடிகர் என இவருக்கு பெயரும் உண்டு. சமீபத்தில் இவர் நடித்த லைக்கர் படம் பெரும் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதியின் புதிய படமான வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் ராஷ்மிகா மந்தானா. இவரும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார் . சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா வீடியோக்களையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம்.
ஏற்கனவே ராஷ்மிகா மந்தானவிற்கும் விஜய் தேவார கொண்டாவிற்கும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. சமீபத்தில்இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சுற்றுலா சென்று இருந்தது சமீபத்தில் வெளியான போட்டோக்களால் உறுதியானது.
ராஷ்மிகா வெளியிட்ட ஒரு லைவ் வீடியோவில் பின்னணியில் ஒரு ஆண் குரல் கேட்டுள்ளது அந்தக் குரல் விஜய் தேவர்கொண்டாவின் குரல் தான் என ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
சமீபத்தில் நடந்த புத்தாண்டு பார்ட்டியில் ராஷ்மிகா லைவ் வீடியோவில் வந்து ரசிகர்களுடன் உரையாடினார். உங்க வயசு என்ன என ஒரு ரசிகர் ஒருவர் கேட்க, 26 வயது என ராஷ்மிகா பதில் அளிக்கிறார். அந்த நேரத்தில்தான் அந்த ஆணின் குரல் கேட்கிறது. இது நிச்சயம் விஜய் தேவரைகோண்டாவின் குரல்தான் எனவும், இருவரும் காதலிப்பது உறுதி எனவும் ரசிகர்கள் காரசாரமாக விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த வீடியோ வெளியான நாளிலிருந்து தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இந்த கிசுகிசு வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
VD voice in the background😅😅#VIROSH #VijayDeverakonda #RashmikaMandanna
— Bharath (@Bharath__b) January 2, 2023
may be friends or may be something else 😜😜 pic.twitter.com/vYAraniND0