#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட்ராசக்க.. கல்யாணம் தான் முடிஞ்சுருச்சே, அடுத்து ஹனிமூன்தான்... ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியின் ஹனிமூன் பிளான் ரெடி..! நீங்களே பாருங்க..!!
லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திர சந்திரசேகர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இவருக்கும், சீரியல் நடிகையான மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்ட நிலையில், தயாரிப்பாளர் உருவ அமைப்பை வைத்து நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து வந்தனர்.
இந்த நிலையில், மகாலட்சுமி ரவீந்திரின் பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டார் என்ற விமர்சனமும் நடந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் பல YouTube சேனல்கள் நடத்திய நேர்காணலில் பதில் அளித்து வருகின்றனர்.
சமீபத்தில் திருமணம் செய்த விக்னேஷ் - நயன்தாரா ஜோடி தாய்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அதனைப் போல தயாரிப்பாளர் ரவிந்தர் - நடிகை மகாலட்சுமி ஜோடி ஐரோப்பா அல்லது லண்டனுக்கு ஹனிமூன் செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு பின்னர் ஹனிமூன் செல்ல இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.