#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
22 வயது நடிகையுடன் 50 வயது நடிகர் ரொமான்ஸ்! வெளியான அதிரடி அறிவிப்பு!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை நிவேதா தாமஸ். சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக டிவி தொடர்களில் அறிமுகமான இவர் தற்போது மிகப்பெரிய நாயகியாக வளர்ந்து விட்டார். விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். கடைசியாக கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார் நிவேதா.
இந்நிலையில் தனக்கு படிப்புதான் முக்கியம் என்று நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். திரி ‘ரீமேக்’ படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நிவேதா தாமஸிற்கு தற்போது 22 வயதுதான் ஆகிறது. நடிகர் ரவி தேஜாவுக்கு 50 வயது ஆகிறது. இதன் மூலம் 22 வயது பெண்ணுடன் ரொமான்ஸ் செய்ய போகிறார் நடிகர் ரவி தேஜா.