"யாருடா இந்த நேசமணி" 18 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரை கலக்கும் வடிவேலு காமெடி



Reason behind Pray_for_neasamani

ட்விட்டரில் நேற்று முதல் இன்று வரை இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹேஷ் டாக் '#Pray_for_Neasamani'. உண்மையில் யார் இந்த நேசமணி என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. 

உண்மையில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் தான் அவரின் பெயரை குறிப்பிட்டு இது போன்ற ஹேஷ் டாக்கினை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துவர். ஆனால் உண்மை கதாபாத்திரமே இல்லாமல், ஒரு படத்தில் நடந்த காமெடி சீனை மட்டுமே மையப்படுத்தி இந்த ஹேஷ் டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

Pray_for_Neasamani

2001 ஆம் ஆண்டு விஜய், சூர்யா மற்றும் வடிவேலு நடித்த படம் தான் ப்ரெண்ட்ஸ். இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காண்ட்ராக்டர் நேசமணியாக நடித்த வடிவேலுவின் தலையில் சுத்தியல் விழுந்து காயம் ஏற்பட்டுவிடும். இந்த சீனை மையப்படுத்தி தான் இந்த ஹாஸ் டாக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

இது எப்படி ஆரம்பித்தது என்ற பாரத்தோமேயானால், சிவில் இன்ஜினியரிங் படிக்கும் பெண் ஒருவர் பேஸ்புக்கில் சுத்தியலை பதிவிட்டு உங்கள் நாடுகளில் இதற்கு என்ன பெயர் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனைக் கண்ட ஒரு குசும்புக்கார வடிவேலு ரசிகர், "இதற்கு பெயர் சுத்தியல், இதனை எதன் மீதாவது அடித்தால், டங் டங் என சத்தம் வரும். ஐமீனில் வேலைப் பாரத்த போது காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் இந்த சுத்தியல் விழுந்து காயம் ஏற்பட்டுவிட்டது" என கமெண்ட் செய்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து வேறு ஒருவர் இது உண்மை சம்பவம் என நினைத்து, நேசமணி இப்போது எப்படி இருக்கிறார் என நலம் விசாரிக்க ஆரம்பித்ததில தான் இந்த 'Pray_for_Neasamani' என்ற ஹேஷ் டாக் முதலில் பேஸ்புக்கில் ஆரம்பித்து தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.


ஒன்னுமே இல்லாத ஒரு காமெடி சீனை இந்த அளவிற்கு ட்ரெண்டிங் ஆக்க முடிந்த நமது சமூகத்தால் எத்தனையோ பிரச்சனைகளை இதுபோன்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்து தீர்வினை காண முடியும். யோசித்து பாருங்கள், ஒரு சினிமா காமெடி சீனிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஒரு நிஜ நிகழ்வுக்கும் கொடுக்க ஆரம்பியுங்கள், மாற்றம் நிச்சயம் நடக்கும்.