#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கல்யாணம் முடிஞ்ச கையோட ரெடின் கிங்ஸ்லி எடுத்த முடிவு.. வைரலாகும் ஃபோட்டோஸ்.!
கோலிவுட் திரைத்துறையில் தொழிலதிபராகவும், நகைச்சுவை நடிகராகவும் இருந்து வருபவர் ரெடின் கிங்ஸ்லி. சில நாட்களுக்கு முன்பு இவருக்கு பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஹனிமூன் சென்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு மிகவும் பரிச்சயமான ரெடின் கிங்ஸ்லியை தனது 'கோலமாவு கோகிலா' படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வைத்தார். இவரது உடல் மொழியும், வசன உச்சரிப்பும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.
தொடர்ந்து அவர் சந்தானம், ரஜினி, விஜய், விஜய் சேதுபதி, வடிவேலு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். தொடர்ந்து இவர் நிறைய படங்கள் மற்றும் சீரியஸ் களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை சங்கீதாவை அவர் சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தம்பதிகள் இருவரும் தற்போது ஹனிமூன் சென்றுள்ள நிலையில் அதற்கான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.