#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அவர் தப்பான ஆளு! இப்படி நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்! சித்ராவின் கணவர் குறித்து பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை!
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளமே கொண்டவர் நடிகை சித்ரா. அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாகவும் இருந்தது. ஆனால் இதற்கிடையில் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஷூட்டிங்கிற்கு சென்ற இடத்தில் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு பலரும் வேதனையுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இது கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகமும் பலருக்கும் எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்த் குறித்து அவரது தோழி ரேகா நாயர் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சித்ரா சோகங்களை எல்லாம் சிரிப்பால் மறைத்து போலி புன்னகையால் அனைவரையும் மகிழ்வித்தாள். சித்ராவை விட ஹேமந்த் ரவியை எனக்கு நன்றாக தெரியும். அவர் என்னிடம் பலமுறை பேசியுள்ளார்.அவருக்கு பல பெண்களோடு தொடர்புள்ளது. அவர் போகாத கிளப், பப்புகளே கிடையாது.
சித்ராவின் நிச்சயதார்த்த போட்டோவை பார்த்தவுடன் செம ஷாக்கானேன். அவரிடம் நீ தேர்வு செய்திருக்கும் நபர் சரியான ஆள் கிடையாது என்று சொன்னேன். நண்பர்கள் மூலம் சொல்லச் சொல்லி வற்புறுத்தினேன். அவன் எங்கே இருந்தாலும் அடிக்கடி சித்ராவுக்கு போன் செய்து, எங்கே இருக்கிறாய், யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுக்கொண்டே இருப்பான். இதனால் சித்ரா எப்போது பதற்றமாகவே இருப்பாள். சித்ராவிற்கு இப்படி நடக்கும் என்று முன்பே தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று தெரியாது. சித்ரா விஷயம் தற்கொலையாக தெரியவில்லை. அவள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதுவும் கொலைதான் என கூறியுள்ளார்.