#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாரிமுத்து இறப்பில் கூட காசு பார்க்கும் மனுஷன்.. பயில்வான் ரெங்கநாதன் சாவுக்காக காத்திருக்கும் நடிகை.!
பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் வழியாக பலரை பற்றியும் அவதூறு பேசி வருகிறார். இதற்கு நடிகர், நடிகைகள் கண்டனங்களை தெரிவித்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாமல் இஷ்டத்திற்கு அவர் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து மாரடைப்பில் உயிரிழந்த நிலையில் அது குறித்து அவதூறாக பேசிள்ளார்.
அவர் கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஜோதிடர்களுக்கு எதிராக பேசியதும், சீரியலில் வில்லனாக நடித்ததால் பல பெண்கள் அவர்களுக்கு சாபம் விடுவார்கள். அந்த சாபமும் தான் மாரிமுத்து இறப்புக்கு காரணம் என்று பேசி இருந்தார். ஏற்கனவே, நடிகை ரேகா நாயருக்கு, பயில்வான் ரங்கநாதருக்கும் குடிமிப்புடி தகராறு இருந்து வருகின்றது.
இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதனின் இந்த வீடியோவை பார்த்த ரேகா நாயர்,' ஒருவரது இறப்பில் கூட பணம் சம்பாதிக்கும் அளவுக்கு அல்பமான மனிதராக இவர் இருப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. மாரிமுத்து சார் இறப்பை பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
சாபத்தை வாங்கியவர்கள் இறந்து போவார்கள் என்றால், முதலில் இவர் தான் செத்திருக்கணும். இவர் செத்துப் போற நாளை நான் பட்டாசு வெடித்து கொண்டாட காத்து இருக்கிறேன்." என்று தெரிவித்து இருக்கிறார்.