மன்சூர் அலிகான் பேசியதற்கு திரிஷா பொதுவெளியில் கண்டனம் தெரிவித்திருக்கக் கூடாது ரேகா நாயர்யின் சர்ச்சை பேச்சு..



Rekha nair controversy talk

விஜய் டிவியில் "ஆண்டாள் அழகர்" தொலைக்காட்சித் தொடரின் மூலம் நடிக்க வந்தவர் ரேகா நாயர். தொடர்ந்து சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள இவர் கதகளி, போக்கிரி ராஜா, தெறி, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Mansoor

ரேகா நாயர் சமீபத்தில் மன்சூர் அலிகான் மீது எழுந்த சர்ச்சை குறித்து பேட்டியொன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "சமூக வலைத்தளத்தில் எதைக் கூறினால் வைரலாகும் என்று தெரிந்து கொண்டு அதை எல்லோரும் வைரலாக்கி வருகிறார்கள்.

குற்றச்சாட்டு கூறும் யாரும் மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோவையும் பார்த்தார்களா? சினிமா துறையில் மன்சூர் அலிகான் தான் இப்படி முதல் முதலாக பேசியுள்ளாரா? அவர் பேசியதற்கு த்ரிஷா இனிமேல் அவருடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அத்தோடு இந்த பிரச்சனை முடிந்தது.

Mansoor

ஆனால் அதை மேலும் பேசி பெரிதாக்கியது யார்? லியோ பட இயக்குனர் நேரடியாக மன்சூர் அலிகானிடம் ஏன் இப்படி பேசிட்டீங்க? திரிஷா மேடம் கிட்ட பேசுங்க என்று கூறியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கும். ஆனால் அதை செய்யாமல் பொதுவெளியில் கண்டனம் தெரிவித்தது ஏன்?" என்று காட்டமாக கூறியுள்ளார்.