#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கெத்தான ரோலில் களமிறங்கும் தல மற்றும் ரெங்கராஜ் பாண்டே! அப்போ படம் வேற லெவல்தான்!
தல அஜித் விஸ்வாசம் படத்தை அடுத்து பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்த பிங்க் படம் மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது அதன் தமிழ் ரீமேக்கில் தல அஜித் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு எழுந்துள்ளது.
இந்த படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இயக்குனர் வினோத் படத்தை இயக்குகிறார். வித்யாபாலன், ரெங்கராஜ் பாண்டே போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தந்தி தொலைக்காட்சி மூலம் பிரபலமா ரெங்கராஜ் பாண்டே தொலைக்காட்சியை விட்டு வெளியேறிய நிலையில் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ரெங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் என்ன என்பது பற்றி செய்தி வெளியாகியுள்ளது.
பிங்க் பட ரீமேக்கில் அஜித் ஒரு வக்கீலாக நடிக்கவுள்ளார். இதனால் அவரை எதிர்த்து போட்டியிடும் வக்கீலாக ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளார்.
பிங்க் படத்தில் கோர்ட் சீன் தான் மிக முக்கியமாக இருக்கும் என்பதால், இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே மற்றும் அஜித் மோதிக்கொண்டு பேசும் போது, அது வெற லெவலில் தான் இருக்கும்.