பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"முதல் முத்தத்தை என்னால் மறக்க முடியாது" ஏன் தெரியுமா.. நடிகை ரேஷ்மா ஓபன் டாக்.?
"வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து வாணி ராணி, 10 மணி கதைகள், மரகத வீணை, சுந்தர காண்டம், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து கோ 2, திரைக்கு வராத கதை, பேய் மாமா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இதன்பின்னர் வேறு படவாய்ப்புகள் கிடைக்காததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அதன் பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. தொடர்ந்து இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் ரேஷ்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அதில் அவரிடம் முதல் முத்தம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "முதல் முத்தம் எனக்கும் நடந்திருக்கிறது. அது யார் என்று என்னால் சொல்லமுடியாது. அவர்கள் எப்போதோ என்னை விட்டுப் போய்விட்டார்கள். ஆனால் அந்த முதல் முத்தத்தை என்னால் மறக்கவே முடியாது. அதற்கு 10 மார்க் கொடுப்பேன்" என்று கூறியுள்ளார்.