பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அம்மாவிற்கு பிடிக்காமல் மூன்றாவது திருமணத்திற்கு ஓகே சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியல் தொடரின் மூலம் பிரபலமாக இருப்பவர் ரேஷ்மா. இவர் முதன்முதலில் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பிரபலமானார்.
படத்தில் பிரபலமாக அனைவராலும் அறியப்பட்டாலும் இதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் ரேஷ்மாவிற்கு வரவில்லை. வெள்ளித்திரையில் இருந்து சின்ன திரைக்கு வந்த ரேஷ்மா பல நாடகங்கள் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாகவே பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருவார். அவ்வாறு பதிவிடும் புகைப்படங்கள் சில சமயம் வைரலாகி வரும்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் வந்த ரேஷ்மா அவரது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் தற்போது வைரல் ஆகியுள்ளது. அதாவது ரேஷ்மாவின் ரசிகர் உங்களை கல்யாணம் செய்துக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா எனக்கு சம்மதம் தான் என் அம்மா தான் சம்மதிக்க மாட்டார் என்று பதிலளித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி உள்ளது.