#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரியோவுடன் கைகோர்க்கும் நட்சத்திரா!! அருமையான பொருத்தம் என ரசிகர்கள் புகழாரம்!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் ரியோ. பிரபல தொலைக்காட்சியில் ம்யூசிக் சேனலில் பணியாற்றி தமிழக இளம் பெண்களின் ஆதரவை பெற்ற இவர் மற்றொரு தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியலில் நடித்தார்.
ரியோ சீரியலில் நடித்தபிறகு இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.இந்தநிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ரியோ நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. "காதல் ஒன்று கண்டேன்" என்ற இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல தொலைக்காட்சி புகழ், பிரபல சீரியல் நடிகையான நட்சத்திரா நடிக்கிறார். மேலும் அஸ்வின் குமார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இயக்குனர் புனித் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் நட்சத்திராவும், ரியோவும் இப்படத்திற்கு பொருத்தமான ஜோடி என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.