#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி; உச்சகட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள்..!
காமெடி நடிகர் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கு இடையேயான மோதல் மேலும் மேலும் முற்றிக் கொண்டே வருகிறது. விஜய் ரசிகர் ஒருவர் கருணாகரனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டுள்ளது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் விஜய் பேசிய உரையை பற்றி கருத்து தெரிவித்த காமெடி நடிகர் கருணாகரன், தனது ட்விட்டர் பக்கத்தில் நான் விஜய்யை வெறுப்பதாகவும், அவர் கூறும் அறிவுரைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானா, நடிகர்களுக்கு இல்லையா, உங்கள் ரசிகர்களிடம் பேச வேண்டாம் என கூறுங்கள், அவர்கள் கேட்கிறார்களா என்று பார்ப்போம் என பதிவிட்டார்.
Is Kutty Kadhai only for leaders or also for actors ask your fans to not be abusive nanba Nanby and check if they listen .Plz ask them not to be abusive and hateful #Peace bro
— Karunakaran (@actorkaruna) October 3, 2018
அவருடைய இந்த சர்ச்சைக்குரிய கருத்தினால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் கருணாகரனை விடாமல் சராமாரியாக திட்டி வருகின்றனர். அதற்கு சற்றும் சளைக்காமல் கருணாகரனும் அவர்களுக்கு பதில் அளித்து வருகின்றார். இதனால் மோதல் முற்றவே கோபத்தின் உச்சத்துக்கே சென்ற தளபதியின் ரசிகர்கள் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
#Sarkar
— Shree (@Shree70912182) October 7, 2018
Rip actor karunakaran pic.twitter.com/eEDW6gl62R