#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் அனைத்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் ரித்விகா. பல்வேறு விமர்சனங்களையும் கடந்தது தன்னுடைய திரைப்பயணத்தில் வெற்றி இலக்கை நோக்கி பயணித்து வருகிறார்.
ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்ற பிறகு இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்தநிலையில் ரித்விகா தற்போது அட்டகத்தி தினேஷூடன் நடித்துள்ள ´இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்ட நடிகை ரித்விகா, தனது அடுத்தடுத்த திரைப்பட வெளியீடுகள் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி உடன் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறேன்.
இதனையடுத்து நடிகர் சிபிராஜ் உடனும் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். இதைத்தொடர்ந்து நடிகை அமலாபால் உடன் பெண்கள் நலன் சார்ந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன் என கூறியுள்ளார்.