#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே.. ரோஜா சீரியல் நடிகைக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் ரோஜா. இந்த தொடரில் அனு கதாபாத்திரத்தில் கொடூர வில்லியாக நடித்து அனைவரையும் மிரள வைத்தவர் ஷாம்லி. அவர் கர்ப்பமாக இருப்பதால் ரோஜா தொடரை விட்டு விலகிய நிலையில், தற்போது அனுவாக விஜே அக்ஷயா நடித்து வருகிறார்.
அவர் இதற்கு முன்பு சன் டிவியில் வணக்கம் தமிழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்துவிட்டார். இந்த நிலையில் அக்ஷயா தற்போது தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், துரதிஷ்டவசமாக எனக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. எனக்கு ஆரம்பத்தில் மூச்சு விட சிரமமாக இருந்தது. அதனால் நான் மருத்துவரை பார்த்து, தகுந்த முன்னெச்சரிக்கையுடன் தனிமைப் படுத்திகொண்டிருக்கிறேன். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பு தீவிரமடையவில்லை.
இன்னும் எல்லா இடத்திலும் கொரோனா உள்ளது. தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிருங்கள், கட்டாயம் மாஸ்க் அணியுங்கள். நான் விரைவில் குணமடைந்துவிடுவேன். உங்கள் பிரார்த்தனையின் போது என்னையும் நினைத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இந்நிலையில் நீங்கள் விரைவில் குணமடைந்து மீண்டு வருவீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.