#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏன்?? என்னாச்சு?? ரோஜா சீரியலில் இருந்து திடீரென விலகிய வில்லி அனு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
ரோஜா சீரியலில் அனு என்ற காதாபாத்திரத்தில் வில்லியாக நடித்துவரும் நடிகை திடீரென ரோஜா சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். அதேநேரம் சன் டிவியில் அதிக TRP பெரும் தொடர்களில் ரோஜா தொடரும் மிக முக்கியமான ஒன்று.
ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடரில் அனு என்ற கதாபாத்திரத்தில், சீரியலின் வில்லியாக நடித்துவருகிறார் ஷாமிலி சுகுமார். ரோஜா சீரியலின் இந்த பெரிய வெற்றிக்கு அனுவின் வில்லத்தனமும் ஒரு முக்கிய காரணம். நெகடிவ் ரோலுக்கு ஏற்ப கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டி, உண்மையான வில்லியாகவே பார்க்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதாலும், தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் சீரியலில் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.