#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. இனி அவர் இல்லையா? இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே! பாரதிகண்ணம்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி!!
பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ரோஷினி திடீரென அந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பைக் கிளப்பும் வகையில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் கவர்ந்த தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் வரும் திடீர் திருப்பங்கள் நாளுக்கு நாள் இந்த தொடர் மீது இருக்கும் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.
பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினான கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியன் ஆகியோர் நடித்து வருகின்றனர். சீரியல் தொடங்கியதிலிருந்து இவரது எதார்த்தமான நடிப்பு மக்களை பெருமளவில் கவர்ந்து, ரோஷினிக்கென பெரும் ரசிகர்கள் உருவாகினர்.
இந்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து கண்ணம்மாவான ரோஷினி விலக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அதாவது நடிகை ரோஷினிக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருவதால் அவர் சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.