#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விரைவில் சன் டீவியில் வருகிறது புது சீரியல்! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா? இதோ!
இந்திய அளவில் நம்பர் ஒன் தொலைக்காட்சியில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள்தான். இல்லத்தரசிகள் மட்டுமே டிவி சீரியல் பார்த்த காலம் மாறி இன்று அணைத்து தரப்பு மக்களும் டிவி தொடர் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு புது புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ரன் என்ற புது தொடரை ஒளிபரப்ப உள்ளது சன் டிவி. இதற்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரனான தெய்வமகள் தொடரில் நாயகனாக நடித்த பிரகாஷ் இந்த தொடரின் நாயகனாக நடிக்கின்றார்.
விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் ஹீரோயின் சரண்யா இந்த தொடரில் நாயகியாக நடிக்கிறார். அஜித் நடித்த அமராவதி, அரவிந்த்சாமி நடித்த வணங்காமுடி, படங்கள் உள்பட வெள்ளி திரையில் கிட்டத்தட்ட இவர் 27 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள இயக்குனர் செல்வா இந்த தொடரை இயக்கியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் இந்த தொடருக்கான ப்ரோமோ கடந்த சிலநாட்களாக ஒளிபரப்பாகிவரும் நிலையில் தொடர் எப்போது தொடங்க உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை. இந்த புது தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.