#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. 3 நாளில் ருத்ரதாண்டவம் படைத்த சாதனையை பார்த்தீர்களா.!
சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு தற்போது வெளியாகி ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் ருத்ரதாண்டவம்.
திரௌபதி படத்தைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் தனது சகோதரரின் படத்தை நடிகை ஷாலினி தனது மகனுடன் திரையரங்குக்கு சென்று பார்த்துவிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ருத்ரதாண்டவம் திரைப்படம் பெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம். அதாவது இதுவரை ருத்ரதாண்டவம் திரைப்படம் ரூ. 6 கோடி வசூலை எட்டி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.