#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அப்பாவின் பிறந்தநாளுக்கு வாரிசு விஜய் வராதது ஏன்? எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்ன காரணம்!!
தமிழ் சினிமாவில் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். அவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.
நடிகர் விஜய் மற்றும் அவரது அப்பா இருவரும் சில கருத்துவேறுபாடு, பிரச்சினை காரணமாக பேசிகொள்வது கிடையாதாம். விஜய் தனது அம்மாவிடம் மட்டுமே பேசுவாராம். இந்நிலையில் எஸ்.ஏ. சி கடந்த ஜூலை 2ந் தேதி தனது 80வது பிறந்தநாளை மனைவி ஷோபனாவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்தக் கொண்டாட்டத்தில் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை.
இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. ஊருக்கு மட்டும்தான் உபதேசமா? ஏன் விஜய் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள் என ஆதங்கத்துடன் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்க்கு ஜூலை 2ஆம் தேதி ஹைதராபாத்தில் ஒரு ஷூட்டிங் இருந்தது. அதற்காக அவர் ஜூலை 1 ஆம் தேதியே புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால்தான் விஜய் தனது பிறந்தநாளுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் பரவி வருகிறது.