#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாடகி சித்ரா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா! கண்கலங்கிய ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் சின்னக்குயில் என அழைக்கப்படுபவர் பாடகி சித்ரா. தமிழ் சினிமாவுக்காக இதுவரை ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ளார் சித்ரா. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடியவர் சித்ரா. இவரது ஒரே மகள் நந்தினி கடந்த 2011ம் ஆண்டு துபாயில் நீச்சல்குளத்தில் விழுந்து மரணம் அடைந்தார்.
தனது மகள் இறந்த சோகத்தை மறக்க, தன்னால் முடிந்த அளவுக்கு சமூக சேவைகள் செய்து வருகிறார் சித்ரா. இப்போது கூட தனது மகளின் நினைவாக கேரளாவில் உள்ள பருமுலா என்ற பகுதியில் உள்ள ஒரு கேன்சர் மையத்தில் கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக் கொடுத்துள்ளார்.
இந்த பிரிவின் தொடக்க விழா நேற்று நடந்தது, தொடக்க விழாவில் பேசியா பாடகி சித்ரா தனது மகளை நினைத்து கெநீர் விட்டது அங்கு இருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.