#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாளை வெளியாகும் சர்க்கார் படத்தின் முதல் பாடல்; இரட்டிப்பு மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள். இரட்டிப்பிற்க்கான காரணம் தெரியுமா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சர்க்கார் படத்தை பற்றி நாள்தோறும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நாளை சர்க்கார் படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் கொண்டாட்டம் என்ற பெயரில் அதிரடி அறிவிப்பை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
3 Days to go for the first Single from #Sarkar !
— Sun Pictures (@sunpictures) September 21, 2018
What kind of song do you think it will be? Duet? Kuthu? A dance number? #SarkarSingleOn24th #SarkarKondattam pic.twitter.com/bkKTkGfMph
ஏனனில், நேற்று நடந்த விழாவில் லண்டனில் செயல்பட்டு வரும் IARA விருது வழங்கும் அமைப்பு இளைய தளபதி விஜய்க்கு சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருதை மெர்சல் படத்துக்காக வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் இவ்விருது உலக அளவில் தமிழர்களுக்கு கிடைத்த சிறப்பு வாய்ந்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் சர்க்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது வரும் 24ஆம் தேதி சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளிவருகிறது. இந்நிலையில் என்ன பாடல் வெளியாகப் போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சர்கார் படத்தில் இருந்து வெளியாகும் ஃபர்ஸ்ட் டிராக் பாடல், படத்தின் அறிமுகப் பாடல் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது படத்திற்கு இடையே வரும் எழுச்சிகரமான பாடல் ஆகும்.