பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"ரொம்ப மிஸ் பண்றேன்., கம் பேக் டூ யூ" - ஹார்ட்டுகளை கையால் தெறிக்கவிட்ட சாக்ஷி..!
நடிகை சாக்ஷி எமிரேட்ஸில் இருந்து சென்னை திரும்பும் நிலையில், சென்னையை ரொம்ப மிஸ் பண்றேன் என்று கேப்ஷன் எழுதி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமடைந்தவர் நடிகை சாஷி அகர்வால். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.
மேலும் சாஷி அகர்வால் திரைப்படங்களை தவிர்த்து விளம்பரபடங்களிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.
இந்த படத்திற்கு முன்னதாக பல திரைப்படங்களில் சாக்ஷி நடித்திருந்தாலும், காலா படத்திற்கு பின்னர்தான் மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்டார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதன் பின் தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் நயன்தாராவின் உதவியாளராக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தொடர்ந்து இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இதன் பின்னரே இவரை ரசிகர்கள் அணுஅணுவாக ரசிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எமிரேட்ஸில் இருந்து சென்னை திரும்பும் சாக்ஷி, புகைப்படத்தின் கீழே "என்னோட ஊரு சென்னை. ரொம்ப மிஸ் பண்றேன். திரும்பி அங்க வர்றதுக்கு ரொம்ப எக்சைட்டா இருக்கேன்" என்று எழுதியுள்ளார்.