#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாமனாருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை! எத்தனையாவது முறையாக தெரியுமா?
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகரை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.மேலும் திருமணத்திற்கு பிறகு இரும்புத்திரை , ரங்கஸ்தலம், நடிகையர் திலகம் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் போன்ற பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார்.
சமந்தா திருமணத்துக்கு முன்பு தனது கணவர் நாகசைத்தன்யாவுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்திருந்தார். அதேபோல தனது மாமனார் நாகார்ஜுனாவுடனும் ஜோடியாக ‘மனம்’, ‘ராஜூ ஹரி ஹாதி 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா மீண்டும் மூன்றாவது முறையாக ‘மன்மதுடு-2’ என்ற படத்தில் தனது மாமனார் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பாயல் ராஜ்புட் உள்ளிட்ட கதாநாயகிகள் நடிக்கின்றனர்.