பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அம்மணிக்கு செம தில்லுதான்! அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய நடிகை சமந்தா! வியப்பில் வாயடைத்துப் போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ், ஜீவா என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா நடிகரும், முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சிறந்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் இவரது கைவசம் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில் தனது உடலை செம ஃபிட்டாக வைத்துக் கொள்ள எண்ணும் சமந்தா அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார். இந்நிலையில் அவர் தற்போது அந்தரத்தில் தலைகீழாக தொங்கிபடி யோகா செய்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் செம தில்லுதான் என கமெண்டு செய்து வருகின்றனர்.