#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. தளபதிக்கு வில்லி இந்த பிரபல இளம்நடிகையா.! அவரு விஜய்க்கு ஜோடியாக நடிச்சவராச்சே!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.
வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு வில்லியாக ஒரு வலிமையான கதாபாத்திரம் இருப்பதாகவும், அதில் முன்னணி நடிகை நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவியுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.
ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. தளபதி விஜய் மற்றும் சமந்தா இருவரும் ஜோடியாக கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்துள்ளனர்.