#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அன்புக்காக மட்டுமே துணை நிற்பவர்.. பிரபல இளம்நடிகர் குறித்து சமந்தா நெகிழ்ச்சி பதிவு.! வைரலாகும் புகைப்படம்!!
தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவர் சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுள்ளார். இறுதியாக நடிகை சமந்தா நடிப்பில் வெளிவந்த யசோதா, சாகுந்தலம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
அவர் தற்போது தெலுங்கில் குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வானா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடைபெற்று வருகிறது. மேலும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் ஜாலியாக சுற்றி வருகின்றனர்.
மேலும் அந்த புகைப்படங்களை அவர்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தும் வருகின்றனர். அவ்வாறு தாங்கள் ஹோட்டலில் சாப்பிடும் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை சமந்தா, உங்களது சிறந்ததையும் பார்த்திருக்கிறேன். உங்களது மோசமானதையும் பார்த்துள்ளேன்.
கடைசியாக வந்ததையும் பார்த்துள்ளேன். முதலாக வந்ததையும் பார்த்திருக்கிறேன். உங்களது ஏற்ற, இறக்கங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். சில நண்பர்கள் மட்டுமே அன்புக்காக உடன் இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.